மயிலாடுதுறை திருஇந்தளூர் ஸ்ரீ சாலக்கரை முனீஸ்வரர் கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதையடுத்து ஸ்ரீ முனிஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.