கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞருக்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.
குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா, பத்மம்மா தம்பதியின் மகன் ரமேஷ், போலாந்து நாட்டில் தனது மேற்படிப்பை படிக்க சென்றார்.
அப்போது, எவலினா மேத்ரோ என்ற போலந்து பெண்ணுடன் ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள Villanova பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் ரமேஷ் பணியாற்றி வரும் நிலையில், மேத்ரோவுடன் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.