விருத்தாச்சலம் மணிமுத்தாற்றில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளால் ஏற்பட்ட தீயில் தனியார் கேபிள் டிவி ஒயர்கள் தீயில் கருகியது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பாலக்கரை – கடைத்தெருவுக்கு இடையே அமைந்துள்ளது மணிமுத்தாறு மேம்பாலம். இதன்கீழ் கொட்டப்பட்ட இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர்.
இதனால், குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும், தீயில் தனியார் கேபிள் டிவி ஓயர்கள் எரிந்து தேசமடைந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.