திண்டுக்கல் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டி தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், தோமையார்புரத்தில் மர்ம நபர்கள் சிலர், குப்பைகளைக் கொட்டி தீ வைத்துள்ளதால், சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இதனால், அந்த வழியாக செல்லக்கூடிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் உள்ளிட்ட சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, வாகன விபத்து ஏற்படும் முன்பு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.