பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளு கார்னர் நோட்டீஸ் வெளியிட வேண்டும் என கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது 3 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர்.
அதன் பேரில், பிரஜ்வல் தந்தையும், எம்.எல்.ஏ-வுமான ஹெச்.டி. ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். தற்போது, பிரஜ்வல் ஜெர்மனியில் தலைமறைவாக உள்ளார்.