பாலைவன தேசங்களில் பெரு மழை ஏன்?
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலைவன தேசங்களில் பெரு மழை ஏன்?

Web Desk by Web Desk
May 6, 2024, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு அமீரகம், துபாய் ,சவூதி அரேபியா,கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடந்த மாதங்களில் புயலுடன் கூடிய பேய் மழை பெய்தது. வரலாறு காணாத கடும் மழையால் மொத்த நகரமே வெள்ளக் காடாகிவிட்டது என்றே சொல்லலாம். இந்த இயற்கை சீற்றத்துக்கு என்ன காரணம் ? என்பது பற்றி பார்ப்போம்…

இன்றைய காலத்தில் வெயிலை எதிர்பார்த்தால் , மழை கொட்டி தீர்க்கிறது. மழைவரும் என்று எதிர்பார்த்தால் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த அசாதாரண வானிலை மாற்றங்கள் உலகையே யோசிக்க வைத்திருக்கிறது.

இந்த இயற்கை மாற்றங்கள், மழையே கண்டிராத பாலைவன நாடுகளின் வாசலையும் உடைத்து கோர தாண்டவம் ஆடி இருக்கிறது.

ஒரு ஆண்டுக்கு 94 மில்லிமீட்டர் மழை என்ற கணக்கு எக்குத்தப்பாக எகிறி , ஓரிரு நாளில் 142 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

பெரும் மழை வந்தால் கூட பாதிப்பு ஏற்படாத வகையில் நகர கட்டமைப்புகள் முறையாக இருந்த நிலையிலும், கொட்டிய பேய் மழை ஐக்கிய அரபு நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளது.

துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இப்போது சவூதி அரேபியாவும் வெள்ளக்காடாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் எங்கு சுற்றி பார்த்தாலும் பரந்த பாலைவனங்கள், வியக்க வைக்கும் மணல் குன்றுகள் எனத் தெரியும் .

ஆண்டின் பெரும்பகுதி வெப்பம் கொளுத்தும் . ஆனாலும் வானிலை மாறியதன் விளைவாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. தலைநகரான ரியாத்தில் , வெள்ளத்தால் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. சவுதி அரேபியாவின் வறண்ட இடங்களில் எல்லாம் திடீர் ஆறுகள் , பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

செயற்கை மழைக்காக செய்த மேக விதைப்பின் விளைவாகவே இந்த மழை என்று பரவலாக பேசப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், லண்டனை சேர்ந்த பிரபல காலநிலை ஆய்வாளர் பிரடிக் ஓட்டோ, காற்று மண்டலத்தில் காலநிலை மாற்றங்களால் மேலும் வெப்பம் ஏற்படுவதால் அதிக மழை எதிர்பாராத நேரத்தில் பெய்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மேகவிதைப்புக்கும் வளைகுடா நாடுகளில் இப்போது பெய்யும் மழைக்கும் பெரிய சம்பந்தம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

புவி வெப்பமடைவதால் தான் கடல் நீர் அதிக சூடாகிறது என்றும், எனவேதான் இந்த மாதிரி பெரும் மழை ஏற்படுகிறது என்றும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் ஹாவ்டன் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் காலநிலை போக்கு மத்தியதரைக் கடலில் இருந்து வரும் மேற்கத்திய இடையூறு மற்றும் துபாய் மற்றும் ரியாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒரு முக்கிய காரணியான சூறாவளி எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தற்போது பெய்யும் கனமழைக்குப் பிறகாவது , மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்கட்டமைப்பு , சூறாவளி மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்படவேண்டும் என்றும் காலநிலை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

காலநிலை மாற்றம் ,அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய அவசரத் தேவையைத் தான் ஐக்கியஅரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பெய்த மழை அறிவுறுத்துகின்றன.

“எல் நினோ எனப்படும் கால நிலை மாற்றத்தினால் தான் காற்று மண்டலத்தில் வெப்பம் அதிகமாகிறது. அதன் விளைவாக தீவிர மழையை ஏற்படுத்துகிறது.

எல் நினோ மற்றும் புவி வெப்பமடைதல் எந்த அளவுக்கு உலகை பாதிக்கும் என்பதற்கு பாலைவன தேசங்களில் சமீபத்தில் பெய்த பெரும் மழையே சாட்சியாக இருக்கிறது.

Tags: desert rain dubaifacts countriessahara desert vs tropical rain forest - which is more deadlyrain in villagecountries explainedweather in dubaiflooding in dubairainingmunga-thirri simpson desertrain in dheavy rainpersian gulf countriesrain in dubai todayWhy is it raining heavily in desert countries?walking in villagerain in dubaiwalking in the raindoes it rain in dubairaining videolargest desert in the worldrains in indialargest desert in africaevery country in the world
ShareTweetSendShare
Previous Post

HEALTH INSURANCE மோசடிகள் ஆய்வறிக்கையில் அம்பலம்!

Next Post

இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies