நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது வீட்டில் பணி புரியும் தோட்ட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் என்பவர், காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார்.
இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில், ஜெயக்குமார் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மரணத்திற்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஜெயக்குமார் வீட்டு தோட்ட தொழிலாளியான கணேசன் என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.