மொழி பெரியதா, இசை பெரியதா என்பது குறித்து நடிகையான தன்னிடம் கேட்க வேண்டாமெனவும் குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி-யின் இயக்கத்தில் வெளிவந்துள்ள அரண்மனை 4 திரைப்படத்தை, நடிகை குஷ்பூ தனது மகள் மற்றும் உறவினர்களுடன் சென்னை கோயம்பேட்டிலுள்ள திரையரங்கில் கண்டு ரசித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம், இளையராஜா – வைரமுத்துக்கு இடையேயான மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், எழுத்தாளரும், இசையமைப்பாளரும் பேச வேண்டியது குறித்து நடிகையிடம் கேட்க வேண்டாமென பதிலளித்து நழுவினார்.
மேலும், அரசியல் மேடைகளில் சினிமா குறித்தும், சினிமா மேடைகளில் அரசியல் குறித்தும் பேசுவதில்லை என நடிகை குஷ்பூ தெரிவித்தார்.