பிரேசிலில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தெற்கு பிரேசிலில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளை இழந்தவர்களை மீட்பு படையினர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் முக்கிய பேரிடர் மாநிலமாக ரியோ கிராண்டே அறிவிக்கப்பட்டுள்ளது, இப்பகுதியில் ஏற்கனவே 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.