கரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏராளமான பகுதிகளில் கத்திரி வெயிலின் கடுமையான தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி கரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
மேலும் மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. கடும் வெயிலில் மக்கள் அவதியடைந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ழ்ச்சியடைந்துள்ளனர்