மாணவர்கள், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம் வெளிவந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய துறைகளும், பல்வேறு வாய்ப்புகளும், அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கின்றன.
இன்றைய தினம் வெளிவந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய துறைகளும், பல்வேறு வாய்ப்புகளும், அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலத்தை…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 6, 2024
மாணவர்கள், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டிக் கொள்கிறேன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், அடுத்த முறை சிறப்பாக உழைத்து, முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.