லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் சீசனின் 54-வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 235 ரன்கள் குவித்தது.
இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிது. இறுதியில் 16 புள்ளி 1 ஓவர்களில் 137 ரன்களுக்கு லக்னோ அணி ஆல் அவுட் ஆனது.