தூத்துக்குடியில் மழை வேண்டி ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் பக்தர்கள் நாக்கில் கற்பூரம் ஏற்றி வினோத வழிபாடு நடத்தினர்.
கழுகுமலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் மூலமாக அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து மழை வேண்டி பக்தர்கள் நாக்கில் கற்பூரமேற்றி வினோத வழிபாடு நடத்தினர்.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.