கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரணியல் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞரை வழிமறித்த 3 பேர், சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் புகாரளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.