காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜகவிற்கு செல்வது, கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்று
கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் எம்.பி,
நெல்லை கிழக்கு மாவட் ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் இறப்பு தொடர்பான வழக்கில் காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பாஜகவிற்கு செல்வது கட்சியை பின்னடவை ஏற்படுத்தும் என்றார்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மறுவாழ்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.