மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய பணிகளை மேற்கொள்ள தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி கும்பகோணம் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர்.
கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடன் மின்வாரிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.