நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளில் கடந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் 3வது கட்டமாக குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு லட்சத்து 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் ஆயிரத்து 300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்.குச்சாவடி முன் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். . வாக்குச்சவாடி முன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான், திக்விஜய சிங், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர் .