நாட்டு மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பிரதமர் மோடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர், இந்திய தேர்தல் செயல்முறை, தேர்தல் மேலாண்மை உலக ஜனநாயக நாடுகளுக்கு ஒரு உதாரணம் என தெரிவித்தார்.
இந்திய பொதுத்தேர்தல் குறித்து உலகின் மிக பெரிய பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். தான் வழக்கமாக வாக்களிக்கும் அதே தொகுதியில் வாக்களிப்பதாகவும், இந்த தொகுதியில் பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுங்கள் என்றும் வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.