பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியானதில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு உள்ளதாக பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தேவராஜ்கவுடா செய்தியாளரை சந்தித்த அவர்,
இவ்வழக்கில் டி.கே.சிவக்குமாரின் பெயரை வெளியிடாமல் இருந்தால், அமைச்சர் பதவிக்கு இணையான வாரியத் தலைவர் பதவி தரப்படும் என தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவால் உரிய விசாரணை நடத்த முடியவில்லை எனவும், கர்நாடக அரசு அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும், தேவராஜ் கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.