நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் 30 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர் .
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், அவரது தோட்டத்து இல்லத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர் இது தொடர்புடைய வழக்கில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஜெயக்குமார் தொலைபேசியில் கடைசியாக பேசிய நபர்கள், கட்சி நிர்வாகிகள் கே.வி தங்கபாலு, வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு காவல்துறை எஸ்.பி. சிலம்பரசன் சம்மன் அனுப்பியுள்ளார்.