நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரணத்தில் காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கோ, சிபிசிஐடி விசாரணைக்கோ கோரிக்கை விடுக்கலாம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
ஜெயக்குமாரின் மரண விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.