ராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியில் தந்தை இழந்த சோகத்தோடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வெழுதிய மாணவி ஆர்த்தி, 487 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இளமனூரைச் சேர்ந்த முனியசாமி என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மகள் ஆர்த்தி தந்தை இறந்த சோகத்திலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். 12-ம் வகுப்பில் 487 மதிப்பெண் எடுத்துள்ள அவர், தந்தை இறந்து விட்ட சூழலில், மேற்படிப்பை எப்படி தொடர்வது எனத் தெரியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.