மத்திய பிரதேச மாநில வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த பெண் வாக்காளர்கள் நாட்டுப்புறப் பாடல்களை பாடி நடனம் ஆடினர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மக்களவை தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி சென்றனர்.