கரூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில், வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த 2 வயதுடைய புள்ளிமான் சுற்றி திரிந்துள்ளது.
அப்போது தெருநாய்கள் துரத்தியதால், அங்குள்ள தனியார் குடோனுக்குள் புகுந்துவிட்டது.
தகவலறிந்து வந்த, தீயணைப்பு வீரர்கள், புள்ளிமானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.