திருவள்ளூரில் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அத்திப்பட்டு புது நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரமாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.