சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச்சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூராக பேசியதாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4-ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
அவரை அழைத்துச்சென்ற போலீஸ் வாகனம் தாராபுரத்தில் விபத்தில் சிக்கியதில் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.