நெல்லையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஆலயம் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சிவகுமார் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
கல்லிடைக்குறிச்சி அருகே, எதிரே வந்த கார் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சிவகுமார் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.