ஜெயக்குமார் மரண வழக்கில் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ம் தேதி முதல் மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியாமல், தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில், ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காவல் துறையினர் சம்மன் வழங்கி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்ட முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி. தங்கபாலு, நெல்லையில் உள்ள தனியார் ஓட்டலில் களக்காடு போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் தம்மை பற்றி குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும், மேலும்
ஜெயக்குமார் மரண வழக்கில் காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தெரிவித்தார்.