தென்காசி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தையொட்டி, அரசு தலைமை மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் வார்டு திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் பலர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 8 படுக்கை வசதிகளுடன் கூடிய ஹீட் ஸ்ட்ரோக் என்ற தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா திறந்து வைத்தார்