திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் 4 கோடியே 19 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரில் உலகப் புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில், ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது, கோயில் உண்டியலில் சுமார் 2 கோடியே 49 லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ 100 கிராம் தங்கம், 24 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 326 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது.