ராமநாதபுரத்தில் 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த சந்துரு இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகி வந்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளார்.
அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து பெண்ணுக்கு நிச்சயமான மாப்பிளைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து திருவாடானை மகளிர் காவநிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.
அதன்பேரில் சந்துரு, தனுஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சக்தி என்பவரை தேடி வருகின்றனர்.