புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில், 24 மணி நேர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள குடிநீர், மோர் உள்ளிட்ட பானங்களை அடிக்கடி குடிக்க வேண்டும் என்றும், இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு அருந்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.