ஐபில் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது.
222 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.