சென்னை வந்துள்ள அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார்.
குலாப் சந்த் கட்டாரியாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப் பரிசையும் வழங்கினார்.
இது தொடர்பான புகைப்படங்களை தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.