உலக அளவில் கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிடிஷ் நீதிமன்றங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ஒன்றாக சேர்ந்து நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், ரத்தத்தை உறைய வைக்கும் பக்க விளைவை ஏற்படுத்தலாம் என ஆஸ்ட்ரா ஜெனேகா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் உலக அளவில் கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அறிவித்துள்ளது.
வணிக காரணங்களுக்காக இந்த தடுப்பூசி திரும்ப பெறுவதாகவும் கோவிட் திரிபுகளை சமாளிக்கும் வகையிலான புதிய மருந்துகள் வந்துவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக ஐரோப்பிய யூனியனில் இந்த மருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அடுத்தடுத்து உலகளவில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அறிவித்துள்ளது.