சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முக்கிய சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காரைக்குடி வ.உ.சி. சாலை வழியாக, வெளியூர்களுக்கு பேருந்துகள் வந்து செல்கிறது. இந்நிலையில், சாலையின் முக்கியப் பகுதியில், கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்ட கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்திற்குள் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, கழிவுநீர் கால்வாயை உடனே மூட நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.