நிரவ் மோடியின் ஜாமீன் மனு ஐந்தாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கியில் 12 ஆயிரத்து 500 கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக வெளிநாட்டுக்கு நிரவ் மோடி தப்பியோடினார்.
அவரை லண்டனில் வைத்து 2019-ல் இங்கிலாந்து அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமின் வழங்க கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.