கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் சென்றவர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இதனத்தொடர்ந்து அஞ்செட்டி சாலையில் சென்றுகொண்டிருந்த 3 பேர் மீது திடீரென அரச மரம் முறிந்து விழுந்தது.
இதில் லோகேஷ் என்பவர் சம்பவ இடத்திலேஉயிரிழந்த நிலையில் ரமேஷ், கோவிந்தராஜ் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.