சிதம்பரம் அருகே பலத்த காற்று வீசியதால், தென்னை மரம் முறிந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழந்தார்.
சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், பின்னத்தூரைச் சேர்ந்த உதயகுமார் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலை பக்கவாட்டில் இருந்த தென்னை மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது. இதில், உதயகுமாரின் தலைப்பகுதியில் அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, சிதம்பரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.