தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை சுமார் 54 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது தமிழக அரசு வெளியிடும்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 பேர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதில் ஆண்கள் சுமார் 25 லட்சம் பேர் எனவும், பெண்கள் சுமார் 29 லட்சம் பேர் எனவும், மூன்றாம் பாலினத்தவர் 284 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.