தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதனின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டவரும், தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிப் பயணத்திற்கு வித்திட்டவருமான வேலாயுதனின் மறைவு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 1996-ம் ஆண்டு பாஜக சார்பில் வெற்றி பெற்று தென்னிந்தியாவின் முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமை பெற்ற வரலாற்று நாயகன் வேலாயுதன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.