ஈரோட்டில், மோசடி செய்த சுசி ஈமு நிறுவனத்தின் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெருந்துறையில் கடந்த 2010ம் ஆண்டு தொடங்கிய சுசி ஈமு பார்மஸ் நிறுவனம், பண்ணை அமைத்து ஈமு கோழி வளர்த்தால் ஊக்கத்தொகை, முதலீடு செய்த பணம் திருப்பி தரப்படும் என கவர்ச்சி விளம்பரம் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்தது.
இந்நிலையில் சுசி ஈமு நிறுவனத்தின் அசையா சொத்துக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டது. ஆரம்ப விலை அதிகமாக இருந்ததால், யாரும் ஏலம் முன்னெடுக்க வரவில்லை என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.