அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது, மின் கசிவு ஏற்பட்டு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.