வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பெய்த கனமழையின் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில், பெரியார் நகர் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கால்வாய்களை தூர்வாரத் தவறியதாலேயே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.