ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோடை மழை பொழிந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த சில நாட்களாக சுட்டெரித்த கோடை வெயிலால் பகல் நேரங்களில் வெளியே வர முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.