ராமநாதபுரம் மாவட்டம், முக்காணியில் அமைந்துள்ள சிவசக்தி ஸ்ரீ அங்காள ஈஸ்வரி மற்றும் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயிலில், பூக்குழி திருவிழா நடைபெற்றது.
கோயில் பூசாரி கரகம் எடுத்து முன்னே செல்ல ஏராளமான பக்தர்கள் தலையில் பூத்தட்டு, பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, கோயில் முன்பு வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.