மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசியவர்,
ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என அனைவரையும் அழைத்ததாகவும், ஆனால் தங்கள் வாக்கு வங்கி மீதான பயத்தால் அவர்கள் வரவில்லை என்றும் அமித் ஷா கூறினார்.