புதுச்சேரியில் திடீர் மழை பெய்து குளுமையான சூழல் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், வில்லியனூர், பாகூர், மடுகரை, திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.