உதிரிபாகங்கள் பழுதின் காரணமாக, ஹியூண்டாய், கியா உள்ளிட்ட நான்கு வாகன உற்பத்தியாளர்கள் மொத்தம் 7 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட வாகனங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறுகின்றனர்.
நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஹீயூண்டாய் மோட்டார், கியா, ஜாகுவார் லேண்ட்ரோவர் கொரியா மற்றும் போக்ஸ்வேகன் குரூப் கொரியா ஆகிய நிறுவனங்கள், வாகனங்களின் மொபைல் செயலியில் ஏற்பட்ட மென்பொருள் பிழை உள்ளிட்டவற்றின் காரணமாக, 11 வெவ்வேறு மாடல்களின் 7 ஆயிரத்து 783 கார்களை திரும்பப் பெறுகின்றன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.