ரஷ்ய ராணுவத்துக்கு சட்டவிரோதமாக இந்தியர்களை அனுப்பிவைத்த 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் வேலைக்காக விண்ணப்பித்த இந்தியர்களை அந்நாட்டு ராணுவத்தில் சேர்த்த தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த அருண், யேசுதாஸ், நிஜில் ஜோபி பென்சாம் மற்றும் மும்பையை சேர்ந்த மைக்கேல் அந்தோணி ஆகியோரை கடந்த 2 மாதத்தில் கைது செய்திருப்பதாக சிபிஐ தற்போது வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.